Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

ஒப்பிலியப்பன் திருக்கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஒப்பிலியப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா  தொடங்கி  நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பெருமான் வெள்ளி வருட வாகனத்திலும், தாயார் வெள்ளி அன்னபட்சி  வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதனையடுத்து வருகின்ற 28-ஆம் தேதி காலை தேசிகரோடு பெருமாள் -தாயார் நேரில் எழுந்தருளுகிறார். மேலும் 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |