ரெங்கராஜ பெருமாளுக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது .
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் பிரசித்தி பெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை கடைசி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு நேற்று திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் பெண்கள் ரங்கராஜ பெருமானுக்கு திருவிளக்கு ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ரங்கராஜ பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.