Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம் ….!!

முத்துமாரி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தயாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில்  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 16-ஆம்  தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கி திருவிழா  நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று காப்பு கட்டி விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக முத்துமாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

அதன் பின்னர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து பக்தர்கள் கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட தீக்குழியில் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு மற்றும்  பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். இந்த திருவிழாவில்  பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |