Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற  கோவிலில்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி கிராமத்தில்  பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில் சித்தருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், திருநீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு வராகி  அம்மன் அலங்காரத்தில்  சித்தர் முத்துவடுகநாதருக்கு  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  சித்தரை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |