பெரியாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியாச்சி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதனையடுத்து கஞ்சி வார்த்தல்மற்றும் மாலை 6 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு படையல் படைக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர். மேலும் திருவிழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் அலுவலர் ராஜா, கணக்காளர் சீனிவாசன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.