ராஜகோபாலசாமி கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் ஏழாவது நாளான நேற்று ராஜகோபாலசாமிக்கு பால், தயிர், இளநீர், திருநீர், உள்ளிட்ட பல வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.