அழகுநாச்சியார் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அழகுநாச்சியார் அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் விரதம் இருந்து வந்த பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகுகுத்தி நகரின் முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.