மாசி மாத பிறப்பை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர் குவிந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதப்பிறப்பு தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மாசி மாதம் பிறப்பை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அருணாச்சலேஸ்வரரை நீண்ட நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்துள்ளனர். அதன்பின்னர் கோவிலின் பின்புறம் உள்ள மலைக்கு பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்றுள்ளனர்.