காளியம்மன் கோவிலில் திருவிழா தொடங்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி-திருப்பத்தூர் சாலையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பின்னர் பல்வேறு பகுதிகளில் விரதம் இருந்து வந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தட்டு ஏந்தி நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
மேலும் இந்த திருவிழாவின் முக்கிய நாட்களான 12-ஆம் தேதி பால்குடம், 13-ஆம் தேதி பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியும், 14-ஆம் தேதி அம்மன் கரகம், தீச்சட்டி, முளைப்பாரி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதியிலிருந்து வரும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.