Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா …. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு காமதேனு  வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் காலை மற்றும் மாலையில் சிறப்பு வீதி உலா நடைபெற்றது.

இதனையடுத்து  பால் குடம், ஊஞ்சல் உற்சவம், தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த திருவிழாவில் தொழிலதிபர்கள், அதிகாரிகள் பொதுமக்கள் என பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஏராளமானோர்  பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர். மேலும்  திருவிழாவானது தீர்த்தவாரி உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.

Categories

Tech |