Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற மண்டலாபிஷேக விழா…. தரிசனம் செய்த அதிகாரிகள்….!!!!

பிரசித்தி பெற்ற விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள என்.வயிரவன்பட்டி  கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிதம்பர விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பல  ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6-ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையடுத்து நேற்று 48-வது நாள்  மண்டலாபிஷேக பூஜை   நடைபெற்றது. இந்நிலையில் விநாயகர் மற்றும் வைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படும்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்த பூஜையில்  மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, எம்.எல்.ஏ. ராமசாமி, அருணகிரி, தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் செல்லத்துரை, சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற உறுப்பினர் தாயுமானவன், மாவட்ட பொருளாளர் எஸ் .எம். பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமியை  தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |