அய்யனார் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பிரசித்திபெற்ற பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சிவராத்திரியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் ஆண்டு நேற்று சிவராத்திரியை முன்னிட்டு அய்யனாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர் தேரில் எழுந்தருளிய பூரண, புஷ்கலை தேவியருடன் எழுந்தருளிய அய்யனாரை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.