Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்கள்….!!

ஆண்டாள் நாச்சியாருக்கு-ரெங்கமன்னாருக்கும் திருவிழா நடைபெறுகிறது. 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும்  பங்குனி மாதம் வரும் பவுர்ணமியை முன்னிட்டு   திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு  வருகின்ற 10-ஆம்  தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான 18-ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆண்டாள் நாச்சியார்-ரெங்கமன்னார் சுவாமிக்கும்   ரத வீதிகள் ஊர்வலம் நடைபெறும்.

அதன் பின்னர் மாலை 4 மணிக்கு ஆண்டாளுக்கு பெரியாழ்வார் தேங்காய் பெறுதல் மற்றும் கன்யாதானம் செய்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதனையடுத்து இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஆண்டாள் நாச்சியாருக்கும் ரெங்கமன்னாருக்கும்  திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இந்த திருவிழா தற்போது எவ்வித கட்டுப்பாடும் இன்றி  நடத்தப்படுவதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமியை  தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்கின்றனர்.

Categories

Tech |