பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், உள்ளிட்ட 18 வகையான பொருள்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் காலை 7 மணி அளவில் திறக்கபட்டபிறகு கோவிலுக்குள் சென்றனர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்துள்ளனர்.