பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர் திருக்கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் கைலாசநாதருக்கு பால், பலம், பன்னீர், தேன், சந்தனம், மஞ்சள், திருநீர் உள்ளிட்ட 11 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கைலாசநாதரை தரிசனம் செய்துள்ளனர்.