Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. மூலவருக்கு சிறப்பு பூஜைகள்…. நெல்லையில் ஜெயந்தி திருவிழா….!!

தேனியில் சீரடி சாய்பாபா கோவிலில் ஜெயந்தி விழா நடைபெற்றுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சீரடி சாய்பாபா கோவிலானது அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் சாய்பாபாவை தினமும் தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இங்கு சாய்பாபாவிற்கான ஜெயந்தி விழாவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதில் சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜைகள் ஆரத்தியுடன் தொடங்கப்பட்டது. மேலும் விக்னேஸ்வர ஹோமமும், பல்வேறு வகையான பூஜைகளும் நடைபெற்றுள்ளது. இவ்விழாவில் பக்தர்கள் அனைவரும் கொரோனாவின் பரவலை தடுக்கும் விதமாக முககவசமும், தனிமனித இடைவெளியும் கடைபிடித்துள்ளார்கள்.

Categories

Tech |