முத்துமாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி- மாசி திருவிழா நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் மாசி-பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகிற 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து 16- ஆம் தேதி காலை பால்குடம் எடுத்து நகரின் முக்கிய தெருக்கள் வழியாக முத்துமாரியம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம்.
அதன் பின்னர் கொண்டு வந்த பாலை வைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நடைபெறும் ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர் லட்சுமணன், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.