காளியம்மன் கோவிலில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொல்லங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நாளான இன்று காலை காளியம்மன் கேடக விமானத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
இதனையடுத்து மதியம் 108 சங்குகளை கொண்டு காளியம்மனுக்கு சங்காபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதன்பின்னர் இரவு பூதகி வாகனத்திலும் வீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.