சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூவனூரில் பிரசித்தி பெற்ற சதுரங்கவல்லபநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதன் பின்னர் பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.