ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றுள்ளது
வேலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று பிரம்மோற்சவ விழா நடைபெற்றது.
இந்நிலையில் சாமிக்கு பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பிரம்மோற்சவ விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்.