பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாத இறுதி வரை நடைபெறும். இந்நிலையில் கோவிலின் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவில் கர்நாடக சனாதன சாகித்திய சங்கம் தலைமையேற்று நடத்தியது.
இந்த கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு ஊர்வலம் நடைபெற்றது. அதன்பிறகு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூ குண்டம் திருவிழா வருகிற 17-ம் தேதியும், தேர்த் திருவிழா 19-ம் தேதியும், முத்துப் பல்லக்கு நிகழ்ச்சி 22-ம் தேதியும், புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி 23-ஆம் தேதியும் நடைபெறும்