Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…!!

சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே பத்மநாபபுரத்தில் பிரசித்தி பெற்ற நீலகண்ட சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு நாள்தோறும் உச்ச பூஜை, ஸ்ரீ பூதபலி, உஷபூஜை மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 9-ம் திருநாளான நேற்று சுவாமிக்கு சிறப்பான தேரோட்டம் நடைபெற்றது.

இதில் சுவாமியும் அம்பாளும் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் வைத்து முக்கிய வீதிகளின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டனர். இந்த தேரை பத்மநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அருள் சோபன், துணைத் தலைவர் மணி, பா.ஜ.க மாவட்ட துணை தலைவர் குமரி ரமேஷ், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |