Categories
தேசிய செய்திகள்

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில்…. சுவாமி தரிசனத்திற்கு ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனையடுத்து தற்போது தொற்று குறைந்ததால் பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வருகிற ஜூலை 16-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம் கணக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக வருகிற 12-ஆம் தேதி கோவில் முழுவதையும் சுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக காலை 6:00 மணி முதல் காலை 11:00 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் 11:00 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்வதற்கு வரலாம். இந்த அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |