பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி கிராமத்தில் புகழ்பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 3-ஆம் தேதி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 2 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த கோவிலின் முதல் நாள் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் கரகம் ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் தேர்த்திருவிழா நடைபெற்றது. அதன்பின் தீச்சட்டி எடுத்தும், தீமிதித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.