பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பிரசித்தி பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவில் கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் போன்றவைகள் நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளினர். அதன்பிறகு தேர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.