Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் யானைக்கு…. ரூ. 12,000 செலவில் புதிய காலணிகள்….!!!

பிரசித்தி பெற்ற கோவிலின் யானைக்கு காலணிகள் வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் உள்ள டவுனில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காந்திமதி என்ற யானை இருக்கிறது. இந்த யானைக்கு தற்போது 52 வயதாகிறது. இதன் காரணமாக சாலையில் நடந்து செல்லும் போது காந்திமதியை அதிக கவனத்துடன் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காந்திமதிக்கு தினமும் உடற்பயிற்சி கொடுப்பதோடு, மூலிகை உணவுகளும் கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் காந்திமதியின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு இந்து வணிகர் சங்கம் மற்றும் பக்தர்கள் சார்பில் புதிதாக காலணிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலணிகள் செய்வதற்கு ரூபாய் 12,000 செலவாகியுள்ளது. அதன் பிறகு மருத்துவர்கள் ஆலோசனையின் படி தற்போது காந்திமதிக்கு காலணிகளை அணிவித்து நடப்பதற்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. மேலும் ஆனித்தேர் திருவிழா தொடங்கிய நிலையில், சுவாமி தினமும் ரதத்தில் வீதி உலா சொல்லும்போது யானை ரதத்தின் முன்பாக கம்பீரமாக நடந்து செல்லும். அப்படி நடந்து செல்லும் போது காந்திமதிக்கு அலங்காரம் செய்து கால்களில் சலங்கை அணிவிப்பார்கள்.

Categories

Tech |