Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற வலியபடுக்கை பூஜை…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற வலியபடுக்கை பூஜையில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மாசிதிருவிழா கடந்த 17-ஆம் தேதி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள், சாமி வீதி உலா, சமய மாநாடு, சிறப்பு ஆராதனைகள் போன்றவைகள் அம்மனுக்கு நடைபெற்றது, இதைத்தொடர்ந்து நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனைகள் போன்றவைகள் நடைபெற்றது. அதன்பிறகு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், யானை மீது களப பவனி, யானை மீது சந்தனக் குட ஊர்வலம் போன்றவைகள் நடைபெற்றது.

அதன்பிறகு 7 மணி அளவில் ராஜரத்தினம் தலைமையில் சமயமாநாடு நடைபெற்றது. மேலும்  இரவு 10 மணி அளவில் பக்தர்கள் அம்மனுக்கு திருக்கண் வைத்து வழிபட்டனர். இதை தொடர்ந்து இரவு 12 மணி அளவில் அம்மனுக்கு அப்பம், கரும்பு, இளநீர், பாயாசம், பழ வகைகள், தேங்காய், பச்சரிசி மாவு, சர்க்கரை, கற்கண்டு, முந்திரி, தேன், அவல் பொரி போன்ற பொருட்களால் படையல் செய்யப்பட்டது. இதனையடுத்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வலியபடுக்கை எனும் மகா பூஜை நடைபெற்றது. அந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை சிறப்பு தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |