Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில்…. திடீரென நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் பிரசித்தி பெற்ற முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இந்த கோவில் மலையில் இருப்பதால் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரயில் சேவை, ரோப் கார் வசதி போன்றவைகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் காரில் செல்வதையே விரும்புகின்றனர்.

ஏனெனில் ரோப் காரில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்துக் கொண்டே செல்லலாம். இந்த ரோப் காரில் மாதம் ஒருமுறை மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அந்த வகையில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மின் இலுவை ரயில் அல்லது படிக்கட்டில் சென்று முருகனை தரிசனம் செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |