மருது அய்யனார் சாமி திருக்கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதிபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மருது அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் புரவி பொட்டல் பகுதியில் இருந்து பால்குடம் எடுத்து கிராமத்தில் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
அதன் பின்னர் சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொங்கலிட்டு கோழி, ஆடுகளை சாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். இந்த திருவிழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்.