சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிரசித்தி பெற்ற மலைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய வந்தனர். அப்போது இந்த பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது. இந்நிலையில் திடீரென மலையின் அடிவாரத்தில் இருந்த பழமையான மரம் முறிந்து சாலையில் விழுந்துள்ளது.
இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி பேரூராட்சி கவுன்சிலர் சுரேகா ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முறிந்து விழுந்த மரத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கிருந்து அகற்றியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.