Categories
ஆன்மிகம் மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்…. சிறப்பு வழிபாட்டில்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் பகுதியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் காலை 5:00 மணிக்கு அம்மனுக்கு பால், பன்னீர், தேன் ஆகிய பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதனை அடுத்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு ஏற்பாடுகளை உதவியாளர் கருணாகரன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆகியோர் செய்து இருந்தனர்.

Categories

Tech |