பிரசித்தி பெற்ற கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகன்- வள்ளி திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் மற்றும் வள்ளி தனித்தனியான பல்லக்கில் புறப்பட்டு மலையில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு சென்றார். இதனையடுத்து முருகன்-வள்ளி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
இதைதொடர்ந்து மலைப் பகுதியில் அமைந்திருந்த விநாயகருக்கும், முருகன்-வள்ளிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பிறகு முருகப் பெருமான் வள்ளியுடன் பல்லக்கில் மீண்டும் கோவிலை நோக்கி புறப்பட்டார். அப்போது போர்புரியும் குறவர் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்