Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. கூடுதல் பேருந்துகள் மூலம் வசூலான 50 லட்சம் ரூபாய்…. வெளியான தகவல்….!!!!

சிறப்பு பேருந்துகள் மூலம் 50 லட்சம் ரூபாய்  கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகையை  முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை  திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு பல்வேறு பகுதியில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட  மாவட்டங்களில் இருந்து 170 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

இந்த சிறப்பு பேருந்துகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் பயணம் செய்து திருத்தணிக்கு சென்று முருகனை வழிபட்டனர்.  இந்நிலையில் இந்த 4 நாட்களில் மட்டும் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 50 லட்சம் ரூபாய் அரசுக்கு கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது. இதுகுறித்து வேலூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரி கூறியதாவது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடி கிருத்திகையை ஒட்டி திருத்தணிக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் அரசுக்கு 1 கோடி ரூபாய் அதிகமான வருமானம் கிடைத்தது. ஆனால் தற்போது வருமானம்  50  லட்ச் ரூபாயாக  குறைந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |