Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில்….. சிறப்பாக நடைபெற்ற பூஜைகள்…. திரளானோர் சாமி தரிசனம்…!!

விநாயகர் கோவிலில் நடைபெற்ற பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஏப்ரல் மாத வருடாந்திர புதிய கணக்கு தொடங்குவதை ஒட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையின் போது விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வரவு-செலவு புத்தகங்களை சாமியின் பாதங்களில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |