பிரேசிலில் ஒரே நாளில் 2500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு பலியாகியிருப்பதால் நாடு முழுவதும் பெரும் பீதி நிலவுகிறது.
சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் பிரேசிலில் 69,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 33 லட்சத்தை கடந்துள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 2,535 பேர் உயிரிழந்ததால் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3,51,459 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 66,764 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 740 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.