Categories
மாநில செய்திகள்

பிரச்சாரத்தின்போது பணம் கொடுக்கும் நத்தம் விஸ்வநாதன்… வைரலாகும் வீடியோ..!!

முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான நத்தம் விஸ்வநாதன் பரப்புரையின் போது பணம் கொடுத்து வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுகவினர் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முளையூர் ஊராட்சியில் காலை 7 மணியில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

அப்போது அங்குள்ள கிராமங்களில் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கிய போது அங்கிருந்த மக்கள் அவரை வரவேற்கும் விதமாக ஆரத்தி எடுத்து மரியாதை எடுத்தனர். அப்போது முன்னாள் அமைச்சருக்கு முன்பாக வந்து அதிமுக ஆதரவாளர்கள் ஒரு வரிசையாக தரையில் வைக்கப்பட்டிருந்த ஆர்த்தி தட்டுகளுக்கு தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் விநியோகம் செய்தனர். அங்கு களத்தில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த நத்தம் விசுவநாதன் ஆரத்தி எடுத்த தட்டில் பணம் போட்டார்.

இதனை தேர்தல் படையினரும் அரசு அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாக  அதிகாரிகள் செயல்படுகின்றனர் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் பிரச்சாரத்தின்போது பொதுமக்களுக்கு நத்தம் விசுவநாதன், அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |