Categories
மாநில செய்திகள்

பிரச்சாரத்தில் ஈடுபட்ட … மற்றொரு தேமுதிக வேட்பாளருக்கு கொரோனா..!!

பிரசாரத்தில் ஈடுபட்ட சென்னை விருகம்பாக்கம் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜூக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் ஒரு தேமுதிக வேட்பாளருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Categories

Tech |