பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வரை அவதூறாக பேசிய குற்றத்திற்காக பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு தலைவர் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஜெயபிரகாஷை கைது செய்த காவல்துறையினரை கண்டித்தும், ஜெயபிரகாஷ் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த போராட்டத்திற்கு பா.ஜ.க கட்சியின் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். இதற்கு தோவாளை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தலைவர்கள் கிருஷ்ணன் மற்றும் மகாதேவன் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்கம், மாநில செயலாளர் உமாரதிராஜன், செயற்குழு உறுப்பினர் கோபகுமார், செய்தி தொடர்பாளர் நாராயணன திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.