Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு…. புகாருக்கு புதிய செயலி… தஞ்சை மேயரின் அதிரடி அறிவிப்பு….!!

தஞ்சை மாநகரில் புதிய மாற்றத்தை கொண்டு வர பல்வேறு திட்டங்களை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் நேற்று காலை சில இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது முதலில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், மீன் மார்க்கெட் ஆகியவற்றில் ஆய்வு செய்தனர். பின் கீழவாசல் சின்னக்கடை தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது அவர்கள் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதாகவும், பாழடைந்த கட்டிடத்தை இடிப்பதும், கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து 12, 13 வது வார்டுகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது  மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது, தஞ்சை மாநகரில்  பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும், தினமும் மக்களை சந்தித்து மக்கள் பிரச்சனைகளைப் பற்றிக் கேட்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும் என்றும், தினமும் இரண்டு வார்டுகள் வீதம் சென்று அப்பகுதியில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

மீன் மார்க்கெட் கட்டிடங்கள் மக்களுக்கு அச்சுறுத்தலாக நெருக்கடியாக இருப்பதால் புதிய மீன் மார்க்கெட் விரைவில் அமைத்து தரப்படும் என்றும், 51 வார்டுகளில் உள்ள சாலைகள் அனைத்தும் மோசமாக இருப்பதால் இன்னும் ஆறு மாதத்தில் புதிதாக  அமைத்து  தரப்படும் என்றும், 51 வார்டுகளிலும் கொசுமருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை அடிக்க  ஏற்பாடு செய்யப்படும் என்றும், தஞ்சை மாநகரில் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை வராத வகையில் கொள்ளிடத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்,

பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சி மேயர்களை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக முறையீடலாம் என்றும்,  இதுமட்டுமல்லாது வணக்கம் தஞ்சை என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை தயார் செய்து வருகின்றோம், மின்வினியோகம் சாலை வசதி போன்ற பிரச்சனை தொடர்பாக வீட்டிலிருந்து செயலி மூலம் புகார் கொடுக்கலாம் என்றும், அதுதவிர கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு இருக்கிறது அவற்றின் மூலம் புகார் கொடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |