முன்னாள் குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல்வாதியான பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்நேற்று மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக பிரணாப் முகர்ஜி உடல் நிலை கவலைக்கிடமாகி உள்ளது.
பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெறுகின்றது என்றும் டெல்லி ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.