சீனப் பிரதமர் லீ கெகியாங்க் விடுத்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரண்டு நாள் பயணமாக சீனா சென்றிருக்கின்றார். இந்த பயணத்தின் போது உயர்மட்ட தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் சீனாவில் முதலீடுகள் பற்றியும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழிதடத்திற்கான திட்டங்கள் பற்றியும் அவர் முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வார் என தெரிகின்றது.
இந்த நிலையில் ஷெபாஸ் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றதற்கு பின் முதல் முறையாக சீனா சென்றிருக்கிறார். அதேபோல் சீனாவின் அதிபராக ஜின் பின் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு பின் அவரை சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் இவராவர் இதனால் அவருடைய இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.