தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமரை முதல்வர் முக ஸ்டாலின் இன்று சந்தித்து பேச தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். இதையடுத்து டெல்லி சென்ற முதல்வர் பிரதமர் மோடியுடன் பேசி வருகிறார். இதில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மோடியிடம் ஸ்டாலின் ஆலோசனை செய்கிறார். இந்த ஆலோசனையின் 7 பேர் விடுதலை, நீட் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வு ரத்து செய்யவேண்டும் என்றும் புதிய கல்விக் கொள்கை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைக்கவேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.