பிரதமர் நரேந்திர மோடியின் கவிதைத் தொகுப்பு விரைவில் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு இம்மாதம் வெளியிடப்படுகிறது. இந்தக் கவிதைத் தொகுப்பு ‘சுய கடிதங்கள்’ ‘Letters to Self’ என்ற பெயரில் வெளிவரவுள்ளது. வரலாற்றாசிரியரும் கலாச்சார பத்திரிகையாளருமான பாவனா சோமையா மொழிபெயர்ப்பாளராக உள்ளார்.
2020 ஆம் ஆண்டு மோடி எழுதிய ‘அம்மாவுக்கு கடிதங்கள்’ என்ற புத்தகம், மோடி தன்னை ஒரு இளைஞனாக பாவித்து தாய்க்கு கற்பனை செய்து எழுதியிருந்தார். அதுவும் பாவனா சோமையா மொழிபெயர்த்தார். குஜராத்தியில் பல புத்தகங்களை எழுதிய நரேந்திர மோடியின், எக்ஸாம் வாரியர் என்ற புத்தகம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் இந்தப் புத்தகத்தை எழுதினார்.