குஜராத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இப்போது குஜராத்தில் மீண்டுமாக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கென அவ்வப்போது பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சென்று பலஆயிரம் கோடிக்கான திட்டங்களை துவங்கி வைத்து, பிரசாரம் செய்து வருகிறார். அண்மையில் குஜராத்தில் அவர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் மோடியின் காரில் ஏற முயற்சி செய்த அம்மாநில முதல் மந்திரி பூபேந்திர படேலை, மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் தடுக்கும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குஜராத் முதல் மந்திரி பிரதமரின் காரில் ஏற முயற்சிப்பதை காணலாம். அப்போது பாதுகப்பு அதிகாரிகள் படேலை காருக்குள் நுழையவிடாமல் தடுக்கின்றனர். ஒரு மாநிலத்தின் முதல்மந்திரி இவ்வாறு பாதுகாப்பு படை வீரரால் அவமதிக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.