Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் தீபாவளி பரிசு இதுதான்….. செம மகிழ்ச்சியில் விவசாயிகள்…..!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 12 ஆவது தொகை எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் 12-வது தவணை தொகை விடுவிக்கும் நிகழ்ச்சி நேற்று டெல்லியில் பிரதமர் விவசாயிகள் கவுரவ மாநாட்டில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு 11 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு 12-வது தவணை நிதியுதவியை விடுவித்தார். மொத்தம் ரூ.16 ஆயிரம் கோடி நிதியை அவர் விடுவித்தார். இத்துடன், இதுவரை மொத்தம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் கோடி நிதி, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |