Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டம்…. 2024 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமரின் நகர்ப்புற வீடு கட்டிடம் திட்டத்தை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டி முடிக்க மாநில யூனியன் பிரதேச அரசுகள் கூடுதல் கால அவகாசம் கோரி இருந்தனர். அதனால் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வீடுகளில் கட்டுமான பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இதனையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டத்திற்கு ரூ.2.03 லட்சம் கோடி நிதி உதவி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதில் ஏற்கனவே ரூ.1.18 லட்சம் கோடி மாநில யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை ரூ.85,406 கோடி விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |