Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் நெருங்கிய உறவினர் கொரோனாவுக்கு பலி – அதிர்ச்சி…!!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய உறவினர் நர்மதாபென் மோடி(80) அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்ததால், பத்து நாட்களுக்கு முன்பு சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். ஏற்கெனவே, நர்மதாபென் கணவரும், பிரதமரின் தந்தை தாமோதர்தாஸின் சகோதரருமான ஜக்ஜீவந்தாஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள் நர்மதாபென் மோடி மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துவருகின்றனர்.

Categories

Tech |