Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிரதமரின் பிறந்த நாள் விழாவில்…. மாட்டு வண்டி பந்தயத்திற்கு அனுமதி மறுப்பு…. மதுரை ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!

இந்திய பிரதமரின் பிறந்த நாள் விழாவில் மாட்டுவண்டி குதிரை வண்டி பந்தயங்கள் நடத்த அனுமதி மறுத்து மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ராஜவல்லிபுரத்தின் பாஜக தலைவராக ஆறுமுகம் என்பவர் உள்ளார். இவர் மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது “ஆறுமுகம் என்கிற நான் ராஜவல்லிபுரத்தின் பாஜக தலைவராக இருக்கிறேன். இந்நிலையில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா வருகின்ற 17ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு எங்களுடைய கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம், குதிரை வண்டி பந்தயம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்த முடிவு செய்துள்ளோம்.

இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் உரிய பாதுகாப்பும் அனுமதியும் வழங்குமாறு விண்ணப்பித்து இருந்தோம். ஆனால் அவர் இதற்கு அனுமதிக்கவில்லை. எனவே பிரதமரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார். இந்த மனுவானது நீதிபதிகள் சத்யநாராயண பிரசாத், மஹாதேவன் ஆகியோரது முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது அரசு தரப்பு வக்கீலான செந்தில்குமார் ஆஜராகி குதிரை வண்டி பந்தயம் மாட்டுவண்டி பந்தயம் போன்றவை நடத்துவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளார். அதற்கு மனுதாரரான ஆறுமுகத்தின் வக்கீல் இந்த விழாவில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். எனவே இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு நீதிபதிகள் தரப்பில் இருந்து கூறியதாவது “சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது தான்.

அதில் யாருக்கும் பாரபட்சம் என்பது கிடையாது. பிறந்தநாள் நிகழ்ச்சி என்றால் நலத்திட்டங்கள், இனிப்புகள் வழங்கலாம். மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயங்கள் தான் நடத்த வேண்டும் என்பது கிடையாது. எனவே இது போன்ற போட்டிகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கு குறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |