பிரதமர் பேசியதை பாஜக யூடியுபில் ஏற்றிய சில வினாடிகளில் 4500 டிஸ்லைக் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நேற்று மாலை 6 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் ஊரடங்கு முடிந்து நாட்டின் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பி வருவதாக கூறினார். இறப்பவர்களின் சதவீதம் குறைந்து குணமடைபவர்களின் சதவீதம் அதிகரிப்பதாகவும் ஆனால் தொற்று இன்னும் நம்மை விட்டு விலகவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் கூறினார்.
அதோடு 90 லட்சம் படுக்கைகள் நமது நாட்டில் தயாராக இருப்பதாகவும் லட்சக்கணக்கான சிகிச்சை மையங்கள் 2000 ஆய்வகங்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறிய பிரதமர் கொரோனா கட்டுக்குள் வந்திருக்கும் இந்த நிலையில் மக்கள் அலட்சியம் செய்யாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பிரதமரின் இந்த பேச்சை பாஜகவினர் தங்கள் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டனர்.
பிரதமர் பேசத் தொடங்கியதும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் டிஸ்லைக் கொடுத்தனர் அடுத்த சில வினாடிகளில் அது 4500ஐ தாண்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜகவினர் உடனடியாக டிஸ்லைக், லைக் பட்டனை ஆப் செய்தனர். பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பிரதமரின் பேச்சுக்கள் மக்களிடையே பெரும் எதிர்ப்பை எழ செய்துள்ளது.