இலங்கை பிரதமரின் மகனும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான நமல் ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வருகிறது. இதனால் மக்கள் உணவு மற்றும் எரி பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அந்நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியினால் பொது மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் இலங்கையில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை பிரதமரான மஹிந்த ராஜபக்சேவின் மகனும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான நமல் ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான செயல்முறைகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிபரின் செயலாளரிடம் தெரிவித்து விட்டதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.